மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சிட்டிங் வாலிபால் போட்டி: 21ம் தேதி திருச்செங்கோட்டில் துவக்கம்

பைல் படம்
நாமக்கல்,
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பங்கேற்கும் அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி வரும் 21ம் தேதி திருச்செங்கோட்டில் துவங்க உள்ளது.
இது குறித்து தமிழக பாராவளி அசோசியேசன் தலைவர் ராஜன், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு பாராவளி அசோசியேசன் சார்பில் மார் 21, 22 மற்றும் 23 ஆகிய 3 நாட்கள் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். கல்லூரி உள் விளையாட்டு அரங்கில், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பங்குபெறும் அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் டில்லி, ஹரியானா, உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, உத்திரகண்ட், ஆந்திரா, பீகார், சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அணியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
போட்டி தொடக்க விழாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். மேலும், பாரா ஒலிம்பிக் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். நாக் அவுட் முறையில் பகல், இரவு ஆட்டங்களாக சிட்டிங் வாலிபால் போட்டி நடைபெற உள்ளது. மார்ச் 23ம் தேதி இறுதிப் போட்டிகளும் அன்றைய தினம் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu