சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாய்களை வைத்து புள்ளி மான் வேட்டையாடியவர் கைது

Erode news- புள்ளி மான் வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
Erode news, Erode news today- சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாய்களை வைத்து புள்ளி மானை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. குறிப்பாக, புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், வடவள்ளி வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருவர் புதர் மறைவில் பதுங்கியிருப்பதைக் கண்டு அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அதில் ஒருவர் பிடிபட்ட நிலையில், மற்றொருவர் தப்பிச் சென்றார். இதனையடுத்து, பிடிபட்டவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ராமபயலூரை சேர்ந்த கோபால் என்பதும், தப்பி ஓடியவர் சிக்கரசம்பாளையம் அட்டமொக்கையை சேர்ந்த ஜான்பீட்டர் என்பதும். இவர்கள் 2 பேரும் குட்டைகளில் தண்ணீர் குடிக்க வரும் புள்ளிமான்களை நாய்களை வைத்து வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து புள்ளிமானை வேட்டையாடியதாக கோபாலை வனத்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து புள்ளிமானின் தலை, கால்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஜான்பிட்டரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu