பவானிசாகர் அணையின் இன்றைய (நவ.16) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் இன்றைய (நவ.16) நீர்மட்டம் நிலவரம்
X

Erode news- பவானிசாகர் அணை.

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (நவ.16) இன்று காலை 8 மணி நிலவரப்படி 74.99 அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (நவ.16) இன்று காலை 8 மணி நிலவரப்படி 74.99 அடியாக உள்ளது.

Erode news, Erode news today- தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் 64 அடிக்கும் கீழே சரிந்தது. இந்த நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வியாழக்கிழமை (நவ.16) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் நிலவரம்:-

நீர் மட்டம் - 74.99 அடி ,

நீர் இருப்பு - 13.17 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,956 கன‌ அடி ,

நீர் வெளியேற்றம் - 1,800 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story