ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சென்னை மண்டலத் தலைவர் ஜோதிலிங்கத்தின் மறைவையொட்டி, ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tribute To Chennai Zone President Demise
சென்னை மண்டலத் தலைவர் ஜோதிலிங்கம் மறைவையொட்டி, ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல தலைவராக பதவி வகித்து வந்தவர் ஜோதிலிங்கம். கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று அரசியல் தலைவர்கள், வணிகர்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மண்டலத் தலைவர் ஜோதிலிங்கத்தின் மறைவையொட்டி, ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாநகர பொருளாளர் சாதிக் பாட்சா, மாவட்ட இளைஞர் அணி சேர்ந்த ஜியாவுதீன் மற்றும் அலுவலக செயலர் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டு ஜோதிலிங்கத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu