டூ வீலரின் பெட்டியில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் திருட்டு: 2 பேர் கைது

டூ வீலரின் பெட்டியில் வைத்திருந்த    ரூ. 2.50 லட்சம் திருட்டு: 2 பேர் கைது
X

பைல் படம்

டூ வீலரில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டூ வீலரின் பெட்டியில் வைத்திருந்த

ரூ. 2.50 லட்சம் திருட்டு: 2 பேர் கைது

நாமக்கல்,

டூ வீலரில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேந்தமங்கலம் தாலுக்கா செவ்வந்திப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (34). அவர் அரசு சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி எருமப்பட்டியில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து ரூ. 2.50 லட்சம் பணத்தை எடுத்து தனது டூ வீலரின் பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் அருகே உள்ள எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் வந்தபோது தனது வாகனத்தின் பெட்டியில் இருந்த பணம் திருட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவர் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தியன் வங்கி பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் (40), திருச்சி திருவெரும்பூரைச் சேர்ந்த ராமு (29) ஆகிய இருவரும், சரவணன் பேங்கில் இருந்து பணம் எடுப்பதை நோட்டமிட்டு, அவரைப் பின்தொடர்ந்து சென்று, டூ வீலரின் பெட்டியில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்து. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story