நாமக்கல்லில் 12ம் தேதி முப்பெரும் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

நாமக்கல்லில் 12ம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் தேரோட்ட பணிகள் குறித்து, கலெக்டர் உமா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் தேர்த்தி விழா முன்னேற்பாடுகளை விரிவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
நாமக்கல் நகரில் பிரசித்திபெற்ற நரசிம்ம சாமி, அரங்காநதர் மற்றும் ஆஞ்சநேயர் சாமி முப்பெரும் பங்குனி தேரோட்டம் வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர்ஆபீசில் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசியதாவது:
வரும், 12ல், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் தேர்த்திருவிழாவில், முப்பெரும் தேரோட்டம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, போலீசார், போக்குவரத்தை சீர் செய்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சுவாமி திருவீதி உலா வரும் போதும், திருவிழா காலங்களிலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர், திருத்தேர் விழாவின் போது தீயணைப்பு வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையினர், அனைத்து துறைகளுடன் இணைந்து தேர்த்திருவிழா நல்ல முறையில் நடக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருடன் சேர்ந்து, தேர் செல்லும் பாதையை முன் ஆய்வு செய்ய வேண்டும். தேர் நிறுத்தும் இடங்களையும் முடிவு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். தேர்த்திருவிழா சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன், கூடுதல் எஸ்.பி.,தனராசு, ஆர்.டி.ஓ.க்கள் சாந்தி, சுகந்தி, இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu