/* */

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி கட்டட பணி நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் வேலை தீவிரமெடுத்துள்ளது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டட பணியை நிறுத்த, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி கட்டட பணி நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு
X

இடுக்கி மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சி கட்டடத்தின் கட்டுமான பணிகள்.

இடுக்கி மாவட்டத்தில் உடும்பஞ்சோலை தாலுகாவில் உள்ள, சாந்தம்பாறையில் கட்சி கட்டி வரும் அடுக்குமாடி அலுவலக கட்டுமானத்தை உயர்நீதிமன்றமே நிறுத்த உத்தரவிட்டிருப்பது, மாநிலத்தை ஆட்சி செய்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு ஆகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த கேரள மாநில உயர்நீதிமன்றம். இடுக்கி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சி.வி.வர்கீசுக்கு நோட்டீஸ் கொடுத்ததோடு, மறு உத்தரவு வரும் வரை கட்டிடத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் தடை விதித்திருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசு உத்தரவின் படி, வீடு அல்லது லயன் வீடு கட்ட தடை செய்யப்பட்ட ஏலக்காய் மலப்பகுதி CHR என சாந்தம்பாறை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக இடம் வகைப்படுத்தப்பட்டிருப்பதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

கட்டுமானம் தொடங்கும் போதே அது குறித்து பிரச்சினை இருந்தாலும் தாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கிறோம் என்கிற தைரியத்தில் இடுக்கி மாவட்ட சிபிஎம் செயலாளர் சி.விர்கிஸின் மேற்பார்வையின் கீழே கட்டுமானம் நடைபெற்று வந்ததாக வருவாய்த்துறை குற்றம் சாட்டுகிறது.

உடும்பஞ்சோலை நில ஆவண தாசில்தார், நில ஒதுக்கீட்டு விதிகளின் கீழ் ஆய்வு செய்ததில், கட்சி அலுவலக சம்பந்தப்பட்ட இடத்தின் மீதான உரிமை பத்திரத்தில் சந்தேகம் வந்ததோடு, சம்பந்தப்பட்ட சாந்தம்பாறை கிராம நிர்வாக அலுவலர், கட்டுமானத்திற்கு ஸ்டாப் மெமோ வழங்கிய பிறகும் பணிகளை நிறுத்தவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.

சி.வி.வர்க்கிஸோ சாந்தம்பாறை கட்சி அலுவலகம், 48 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக புது கதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த பிறகும் கூட, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கியதாக தெரியவில்லை.

சின்னக்கானல் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் வேலைகள் தீவிரமெடுத்திற்கும் நிலையில், இடுக்கி மாவட்ட ஆட்சியர் சாந்தம்பாறை கட்சி அலுவலகத்தின் மீது கை வைத்தால், எளிய மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்கிறது காங்கிரஸ் கட்சி.

இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்ட மூவாற்றுபுழா சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ குழல்நாடன், உடனடியாக உயர் நீதிமன்றம், இந்த ஆக்கிரமிப்பு கட்டுமானத்தின் மீது கை வைக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம், ‘சின்னக்காணலில் ஆக்கிரமிப்பு கட்டிடம் என்று வகைப்படுத்தப்பட்ட Fort Munnar ஐ அகற்றினாலே சமானியர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். இந்த முறை உயர் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்படாது என்று நம்பலாம் என கூறியுள்ளார்.

Updated On: 25 Oct 2023 2:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  4. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  5. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  7. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  9. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  10. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...