/* */

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி..!

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 183 பள்ளிகளை சேர்ந்த 13,819 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி..!
X

தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை விளம்பரப் பலகையில் மூலம் அறிந்து கொள்ளும் மாணவிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணி 30 நிமிடத்தில் பள்ளி கல்வித்துறையின் உயர் அலுவலர்களால் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 13819 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டம் மாநிலத்தில் 32 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு மாநிலத்தில் 25 வது இடத்தில் இருந்து தற்போது 32 வது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92 அரசு பள்ளிகளும் இரண்டு நகராட்சி பள்ளிகளும் 6 ஆதிதிராவிட நலப் பள்ளிகள் 19 அரசு உதவி பெறும் பள்ளிகள் 64 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 183 பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதில் தண்டலம் பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மற்றும் உமையாள்பரஞ்சேரி பகுதியில் செயல்படும் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகிய இரு அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 100 சதவீதத்தை எட்டியது.

அரசு பள்ளிகளை பொருத்தவரை 92 பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் மட்டுமே 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது. தனியார் பள்ளிகள் 64 செயல் பட்டு வந்த நிலையில் 27 பள்ளிகள் நூறு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 29 அரசு பள்ளிகள் தொண்ணூறு சதவீதத்திலிருந்து 98 சதவீத வரை மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த அரசு தேர்வில் 1358 மாணவர்களும் 608 மாணவிகளும் என 1966 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் 903 அரசு பள்ளி மாணவர்களும் , 498 அரசு பள்ளி மாணவிகள் என மொத்தம் 1401 அரசு பள்ளி மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 May 2024 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு