/* */

காஞ்சிபுரத்தில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

Awareness Meeting For Quarry And Crusher Owners காஞ்சிபுரம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குனர் வேடியப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

HIGHLIGHTS

Awareness Meeting For Quarry And Crusher Owners

கனிம விதிகள் மற்றும் அரசு போக்குவரத்து விதிகளை முறையாக கையாள வேண்டும் என கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர் விழிப்புணர்வு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் இணை இயக்குனர் வேடியப்பன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனிமவளத் துறையின் கீழ் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகிறது. இவைகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் இங்கிருந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Awareness Meeting For Quarry And Crusher Owners


புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அவ்வகையில் செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் , அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குனர் வேடியப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் பேசிய துணை இயக்குனர் வேடியப்பன், தமிழக புவியியல் மற்றும் சுரங்க துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து உரிமையாளர்களுக்கு எடுத்து கூறப்பட்டு அதனை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என கூறும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது .

குறிப்பாக அதிகம் பாரம் ஏற்றுதல் கூடாது , ஏற்றி செல்லும் கனிம பொருட்கள் மீது தார்ப்பாய் அணிவித்தல், லாரி ஓட்டுனர்கள் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனம் செலுத்துதல் , குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படும் சாலைகளில் தூசு பறப்பதை தவிர்க்க இரு வேலைகள் நீர் தெளித்தல் , பள்ளி கல்லூரி சாலைகளில் செல்லும்போது கவனம் கொள்ளுதல், போக்குவரத்து விதிகள் அனைத்தையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு விதிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் இளங்கோ , உதவி புவியியாலர் சரவணன் , சிறப்பு துணை வட்டாட்சியர் பூபாலன் , குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்க தலைவர் உதயம் தனசேகரன் உள்ளிட்ட துறை மற்றும் உரிமையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Feb 2024 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்