/* */

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 1932 வாக்குசாவடிகளில் வைக்கவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தப்படுகிறது.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்!
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொறுத்தி ஆய்வு செய்த பின் சீல் வைக்கும் காட்சி

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி பலத்த காவல்துறை மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் துவங்கியது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் நிர்வாகம் தேர்தல் பணியை தீவிரபடுத்தி உள்ளது.

முதலாக அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என அறியும் இயந்திரம் ஆகியவை குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆறு சட்டமன்ற தொகுதியில் அடங்கியுள்ள நிலையில் 1932 வாக்கு சாவடிகளுக்கான 2319 வாக்குப்பதிவு இயந்திரங்களில் தற்போது அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி தனியார் அறிவியல் கல்லூரியில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வைக்கப்பட்டிருந்த 396 வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்துக் கட்சி பிரமுகர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் இருந்து வெளியே எடுக்கபட்டு இருபது தேர்தல் அலுவலர்கள் குழுக்கள் சின்னங்கள் பொருத்தும் பணியை ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக காவல்துறை பாதுகாப்பு அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டும், அங்கேயே அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பணிகளை திரையில் பார்த்து அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி 5806 வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும் , ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 April 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்