/* */

தனியார் மாட்டு தீவன தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா

காஞ்சிபுரம் கிளம்பி பகுதி தனியார் மாட்டு தீவன உற்பத்தி தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா நடைபெற்றது.

HIGHLIGHTS

தனியார் மாட்டு தீவன தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா
X

தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கீழம்பி பகுதி கிராம மக்கள்.

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை தீவன கம்பெனியின் நச்சுப் புகையால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த கிழம்பி கிராம ஊராட்சியில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி பிரகாஷ் கால்நடை தீவன உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.

இங்கு தீவன உற்பத்தி ஈடுபடும் நிலையில், அதிலிருந்து வெளிவரும் புகை நச்சுத்தன்மையாக மாறி உடல்நல தீங்கு ஏற்படுவதாகும், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மக்கள் மன்றத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தொழிற்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக முன்பு இதே நிலை நீடித்த போது, அதற்குண்டான தீர்வு கண்ட நிலையில், தற்போது மீண்டும் இதே நிலை தொடர்ந்து வருவதாகவும் இதுகுறித்து பலமுறை அவர்களிடம் கூறியும் செவிசாய்க்கவில்லை என கூறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக இக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் பொது மக்களுக்கு உடல்நல தீங்கு ஏற்படுத்தும் இந்த நிறுவன உரிமையாளர் பிரகாஷ் ராவ் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட குழுவிடம் காவல்துறை ஆய்வாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் அவர்களை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு தற்போது அவரிடம் நிலைமையை எடுத்துரைத்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 19 Dec 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  6. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  7. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  10. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?