/* */

பள்ளிகளை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மாணவ, மாணவிகள்! ஏன்?

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறக் கோரும் வரை இப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

HIGHLIGHTS

பள்ளிகளை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மாணவ, மாணவிகள்! ஏன்?
X

பள்ளியை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மாணவ மாணவிகள். புறக்கணிப்பு குறித்த அறிவிப்பு பலகை பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் பசுமை விமான நிலைய அமைக்க நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறக் கோரி ஏகனாபுரம் கிராம பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கல்வி கற்க அனுப்பாமல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் 20 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து அதற்கு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்காக நீர் நிலைகள் குடியிருப்புகள் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன என அறிய வந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கடந்த 494 நாட்களாக பல்வேறு போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பரந்தூர் பசுமை விமான நிலைய அமைக்க நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறக் கோரி ஏகனாபுரம் கிராம பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கல்வி கற்க அனுப்பாமல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

இந்நிலையில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அரசாணை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நலன் காக்கும் கூட்டத்தில் அரசாணையை திரும்ப பெற கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர். பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க தங்களது பகுதியில் நிலம் கையகப்படுத்தப்படுவதாக அரசாணை வெளிவந்ததை அறிந்த பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளனர். தங்களது எதிர்ப்பைக் காட்ட பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றனர்.

உள்ளூர் அரசியல்வாதிகளிடமும் மற்ற அதிகாரிகளிடமும் இதுகுறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தும், இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தாங்கமுடியாமல், ஆட்சியரிடமே முறையிட்டனர். ஆனால் இது குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகினர். இன்று முதல் ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராடினாலாவது விடிவு கிடைக்குமா என யோசித்து வருகின்றனர். இதற்கு காரணம் முன்னொருமுறையும் இதுபோல நடந்திருக்கிறது.

இதேபோல் கடந்த காலங்களிலும் ஒரு முறை மேற்கொண்ட போது வருவாய் துறை மற்றும் கல்வித் துறை சமரசத்தின் பேரில் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி இருந்தனர்.

அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் எனவும் கிராம இளைஞர்களைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்படும் என போராட்ட எதிர்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் இன்று ஆசிரியர்கள் வகுப்பறையில் அமர்ந்து இருக்கும் காட்சி வருத்தமாக உள்ளது.

Updated On: 26 Dec 2023 4:16 AM GMT

Related News