/* */

35 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

மானாம்பதி அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 35 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

HIGHLIGHTS

35 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அரசு மேல்நிலைப்  பள்ளி மாணவர்கள்
X

1989 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற போது  மாணவ மாணவிகள் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம்.

மரம் திரும்பிய பறவைகளாக 35 ஆண்டுகளுக்கு பிறகு மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி பருவம் என்பது சாதி பேதமற்ற , எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த நினைவுகளை எப்போதும் தனது நண்பர்களை பார்த்தாலும் , நினைத்தாலும் எல்லையற்ற மகிழ்ச்சி அனைவருக்குமே.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த மானம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1989ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற 100 மாணவ, மாணவிகளின் *மரம் திரும்பிய பறவைகள்* நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இதில் 60க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்த முன்னாள் மாணவர்கள் நண்பர்களாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த 60 ஆசிரியர்களை வரவழைத்து கௌரவப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து மாணவ , மாணவிகள் தங்கள் கல்விக் கால நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து மகிழ்ந்தனர்.ஆசிரியர்களும் தங்கள் கல்வி கற்பித்த விதம், அதனால் பயன்பெற்று தற்போது நல்ல நிலையில் உள்ளது என்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ 50 ஆயிரம் மதிப்பிலான ஒலி பெருக்கி, மின்சார மணி அடிக்கும் கருவி வழங்கப்பட்டது.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், குழு புகைப்படம் எடுத்தல், குடும்ப உறுப்பினர்கள் அறிமுகம் , மதிய உணவுகள் அருந்துதல் என பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இறுதியாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளும், நன்றிகளும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Updated On: 3 March 2024 10:12 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...