/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு நூறு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு எழுதிய 12,413 நபர்களில் 11455 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு நூறு
X

பிளஸ் டூ அரசு பொது தேர்வுகள் முடிவு வெளியான நிலையில் ஆர்வத்துடன் மதிப்பெண்களை பார்வையிடும் மாணவிகள்.

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி அரசு பொது தேர்வு +2 மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி மார்ச் 22ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்றது. தேர்வு நிறைவு பெற்றதும் திருத்தும் பணி உடனடியாக துவங்கப்பட்டு அனைத்தும் உரிய கால நிலையில் முடிக்கப்பட்டு மாணவர்களின் மதிப்பெண்கள் அவர்களது இணையதளத்தில் ஏற்றப்பட்டது.

அனைத்தும் பணிகளும் முடிவுற்ற நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு இணையதளங்களில் வெளியிடப்படும் எனவும் மாணவர்களின் அலைபேசிக்கு குறுந்தகவல்கள் மூலம் மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அவ்வகையில் இன்று காலை 10 மணிக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 12,413 மாணவ மாணவிகளின் 11,45 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

ஒரு அரசு பள்ளி மற்றும் 23 தனியார் பள்ளிகள் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றது. இதில் காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த இரண்டாவது ஆண்டாக 100% எட்டி உள்ளது.

இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 613 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பாட வாரியாக பெற்றுள்ளனர்.

தமிழில் ஒரு மாணவரும், வணிகவியலில் 149 , பொருளியல் -86, வரலாறு பாடப்பிரிவில் ஒருவரும், இயற்பியலில் ஒருவரும், கணக்குப்பதிவியலில் 42 பேரும், வேளாண்மை அறிவியலில் 39 பேரும், இயந்திரவியல் பிரிவில் 12 பேரும், கணினி அறிவியலில் 63 பேரும் , கணக்கு பதிவு ஆடிட்டிங்ல் 148 நபர்களும், வணிக கணிதத்தில் 10 பேரும் , கணினி அறிவியல் அப்ளிகேஷன் பாடப்பிரிவில் 19 நபர்களும் , கணிதத்தில் 39 நபர்களும் , விலங்கியலில் மூன்று நபர்களும் என மொத்தம் 613 மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய 12413 பேரில் , தாய்மொழி தமிழில் ஒரே ஒரு நபர் மட்டும் நூற்றுக்கு நூறு பெற்றிருப்பதும், இயற்பியல் மற்றும் வரலாறு பாடத்தில் ஒரு நபரும், கணிதத்தில் 39 நபர்களும் என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

பொதுவாகவே பொறியியல் மருத்துவ உள்ளிட்ட படிப்புகளுக்கு தேவையான இயற்பியல் , கணக்கு உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் வேதியல் பாடப்பிரிவில் ஒருவர் கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறவில்லை என்பதும் வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது.

Updated On: 6 May 2024 4:10 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  2. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  5. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  6. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  10. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!