/* */

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வேட்பு மனு தாக்கல்
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில், தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த பெரும்பாக்கம் ராஜசேகர். உடன் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் வேட்பு மனு தாக்கல் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று அனைத்து கட்சி பிரமுகர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் கேட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று கட்ட பாதுகாப்பு மாவட்ட காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் இன்று தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இடம் அளித்து தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அதிமுக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையில் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

தேர்தல் விதிமுறைகளின் கீழ் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Updated On: 25 March 2024 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்