/* */

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியர் ஆய்வு
X

ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர்கள் விடுதி கட்டப்பட்டு வருவதை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.1.62 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மாநில அரசின் நிதி மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், மாணவர்கள் நல விடுதி சமையலறை கட்டிடங்கள் , பழங்குடி இன மக்களுக்கான தொகுப்பு வீடுகள் , கிராம சாலைகள் இணைப்பு திட்டம், மழைநீர் வடிகால் பணிகள் என பல நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஈஞ்சம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அருகே ரூ.1.62 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், நேரில் ஆய்வு செய்து, பின்பு ரூ. 1.40 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும் நூலக கட்டிடத்தையும் , ரூ.1.10 இலட்சம் சீரமைக்கப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.


மேலும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மாணவ/மாணவியர்கள் பயிலும் வகுப்பறைக்கு சென்று அவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்கள். பள்ளியில் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) பாபு, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்று இருந்தனர்.

Updated On: 25 Oct 2023 12:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்