/* */

காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் *என் கல்லூரி கனவு* எனும் தலைப்பின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் உயர் கல்வி படிக்க உள்ள மாணவர்களுக்கு *என் கல்லூரி கனவு* எனும் தலைப்பில் , உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்திட அறிவுறுத்தியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அலுவலர் சுந்தர் வரவேற்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.


இதில் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த விளக்க உரையை பேராசிரியர் கோபியும் , உத்வேக பேச்சாளர் பேராசிரியர் காளீஸ்வரன் மாணவர்களிடையே தனித் திறமைகள் மற்றும் வழிகாட்டுதலை எவ்வாறு புரிந்து கொள்ளுதல் என்பது குறித்தும் மாணவர்களுக்கு தனது உத்வேக பேச்சு மூலம் உரையாற்றினர்.

மேலும் இத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் உயர்கல்வி படிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு தெளிவாக காணொளி காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் அயல்நாடு சென்று உயர்கல்வி பயில வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தின் பெறுவதற்கான வழிமுறைகளும் இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிகாட்டி கையேடுகளையும் பெற்றுக் கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 25 April 2024 10:25 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...