/* */

காஞ்சிபுரம் மாவட்ட +2 தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

Plus Two Exam Centre Collector Visit காஞ்சிபுரம் மாவட்டத்தில் 54 மையங்களில் இன்று துவங்கும் அரசு பொதுத்தேர்வு வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்ட +2 தேர்வு மையத்தில்   ஆய்வு  மேற்கொண்ட ஆட்சியர்
X

பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ப்ளஸ் டூ அரசு பொது தேர்வு மையத்தில் மாணவியின நுழைவுச்சீட்டை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கலைச்செல்வி.

Plus Two Exam Centre Collector Visit

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 அரசு பொது தேர்வு துவங்கியுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவ்வகையில் , இன்று பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தேர்வு அறைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023 - 2024ஆம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் டூ அரசு பொது தேர்வு இன்று துவங்கி வரும் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதேபோல் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு மார்ச் நான்காம் தேதியும் , பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வரும் மார்ச் 26 ஆம் தேதியும் துவங்க உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 5750 மாணவர்களும் 6791 மாணவிகள் என மொத்தம் 12,541 பேர் அரசு பொது தேர்வு எழுதுகின்றனர். இதற்கென 54 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அந்தந்த தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்வுகளை கண்காணிக்க 100 பறக்கும் படை அலுவலர்களும் 800 அறை கண்காணிப்பாளர்களும் 145 ஆசிரியர்கள் சொல்வதை எழுதுபவர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டிய அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபட்டு தங்களது கல்வி கனவை எழுந்து விட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் அச்சமின்றி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் எனவும், தேர்வு அச்சம் குறித்து ஏதேனும் இருந்தால் அரசு வழிகாட்டி மையங்களை நாடி தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 1 March 2024 8:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்