/* */

காஞ்சிபுரத்தில் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்புணர்வு கார் பேரணி

காஞ்சிபுரத்தில் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்புணர்வு பிரமாண்ட கார் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்புணர்வு கார் பேரணி
X

காஞ்சிபுரத்தில் போலியோ விழிப்புணர்வு குறித்த கார் பேரணியை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் பரணிதரன் தலைமையில், போலியோ ஒழிப்பு குறித்த கார் பேரணி பொன்னேரிகரையிலிருந்து புதிய ரயில்வே நிலையம், பெரிய காஞ்சிபுரம், பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம், மேட்டு தெரு வழியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவலர் விளையாட்டு அரங்கம் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் மற்றும் தமிழ்நாடு அனைத்து மாவட்டத்திலிருந்து வருகை புரிந்த மாவட்ட ஆளுநர்கள் , உறுப்பினர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


உலகளவில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு குழந்தை பருவத்திலேயே மாற்றுத்திறனாளிகளாக உருவான நிலையில், அவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளில் மேற்கொண்டு குழந்தை பிறந்த முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை சொட்டு மருந்து அளிக்கப்பட்டு போலியோ இல்லாத உலகினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தன்னார்வலர்கள் அமைப்புகள், முன் வந்தும் அவற்றின் ரோட்டரி கிளப் முழு வீச்சில் இறங்கி பெரும் சாதனை படைத்து உலக அளவில் இம்மருந்திற்க்கான பொருளாதாரத்தை மேம்படுத்தி அனைத்து மக்களுக்கும் விலையில்லா மருந்தாக போலியோ சொட்டு மருந்து கிடைக்கும் நோக்கில் ரோட்டரி கிளப் முன். வந்து மருந்தினை செலுத்தியமையால் இன்று ஒற்றை நம்பர் அடிப்படையிலேயே ஒரு சில நாடுகளில் மட்டும் போலியோ நோய் காணப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் போலியோவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்த நிலையில், இனி போலியோ இல்லாத உலகை காணலாம் என ரோட்டரி கிளப் சாதனை குறித்து காஞ்சியில் போலியோ விழிப்புணர்வு கார் பயணத்தில் 100க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட 300 அடி நீளபேனரை பிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்பு ரோட்டரி கிளப் உறுப்பினர்களை பாராட்டும் விதமாக சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரோட்டரி கிளப் மூலம் ஒரு கொடிய வியாதியிலிருந்து குழந்தை பருவத்திலேயே விலையில்லா நோய் தடுப்பு மருந்து அளித்து உலக சாதனை புரிந்து , போலியோ இல்லாத உலகை உருவாக்கிய ரோட்டரி கிளப் உறுப்பினர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார்.


மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட அளவில் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் , தொலைபேசி எண்கள் அறிவித்தும், பொது மக்களிடம் சென்று சேரவில்லை , என இதனையும் ரோட்டரி கிளப் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பெண் குழந்தைகள் காப்பதற்கான அரசு அறிவித்துள்ள தொலைபேசி எண்களை பொதுமக்களிடம் சென்று சேரும் வகையில் இன்று ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மத்தியில் விளம்பர பதாகை அறிமுகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக் கொண்டனர்.

இப்போது ஆம்புலன்ஸ் அழைப்பிற்கு 108, போலீஸ் காவல்துறைக்கு புகார் அளிக்க 100, தீயணைப்புக்கு 101, தனித்திருக்கும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090, குழந்தைகள் பாதுகாப்புக்கு 1098 என்ற எண்கள் இருக்கின்றன என்பதை உடன் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் .

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரோட்டரி மாவட்ட ஆளுநர்கள் , சங்க முத்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Oct 2023 12:34 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?