/* */

முழு கொள்ளளவை எட்டிய உத்திரமேரூர் ஏரி !

உத்திரமேரூர் ஏரி நீர்மூலம் 13 கிராமங்களை சேர்ந்த ஐயாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூன்று போகம் பயன் பெறும்.

HIGHLIGHTS

முழு கொள்ளளவை எட்டிய உத்திரமேரூர் ஏரி !
X

உத்திரமேரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கலங்கல் வழியாக நீர் வெளியேறும் காட்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரியின் மூன்று கலங்கள் வழியாக 850 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்று தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது.

இன்றைய காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிக முக்கிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 20 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 19.9 அடி நீர் உள்ளது.

ஏரிக்கு தொடர் நீர் வரத்து காரணமாக இன்று மாலைக்குள் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உத்திரமேரூர் ஏரி மூன்று கலங்கள் வழியாக சுமார் 850 கன அடி நீர் வெளியேறுகிறது.

உத்திரமேரூர் ஏரி நிரம்பினால் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

கடந்த நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 மில்லி மீட்டரும் உத்திரமேரூர் 245 m வாலாஜாபாத்தில் 138 மில்லி மீட்டர் ஸ்ரீபெரும்புதூரில் 250 மில்லி மீட்டர் குன்றத்தூரில் 500 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கத்தில் 393 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது மாவட்டத்தின் சராசரி மழையாக 318 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

நேற்று முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. ஏற்கனவே நிரம்பி ஏரிகள் அளவு தற்போதும் உள்ளது.

உத்திரமேரூர் ஏரி என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய ஏரி ஆகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த ஏரி பல்லவர் மன்னர்கள் காலத்தில் கி.பி. 715 முதல் 825 ஆம் ஆண்டுகளில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு வைர மேக தடாகம் என்ற பெயரும் உண்டு.

உத்திரமேரூர் ஏரி சுமார் 2,720 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து காணப்படுகிறது. இந்த ஏரியில் 13 மதகுகள், மூன்று கலங்கல்கள் மற்றும் இரண்டு ஒழுங்கியமும் கொண்டு அமைந்துள்ளது. ஏரியின் மூலம் 18 கிராமத்தில் உள்ள சுமார் 5,436 ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

உத்திரமேரூர் ஏரி ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும். இந்த ஏரியில் உள்ள நீர்நிலைகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. ஏரியில் படகு சவாரி, மீன்பிடித்தல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் செய்யப்படுகின்றன.

உத்திரமேரூர் ஏரி தமிழ்நாட்டின் முக்கியமான நீர்நிலைகளில் ஒன்றாகும். இந்த ஏரி விவசாயத்திற்கும் சுற்றுலாவிற்கும் ஒரு முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது.

உத்திரமேரூர் ஏரியின் முக்கியத்துவம்

விவசாயத்திற்கு: உத்திரமேரூர் ஏரி 18 கிராமங்களில் உள்ள சுமார் 5,436 ஏக்கர் விலை நிலங்களுக்கு பாசன வசதி வழங்குகிறது. இந்த ஏரியின் நீர்ப்பாசனம் மூலம் பல்வேறு வகையான பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

சுற்றுலாவிற்கு: உத்திரமேரூர் ஏரி ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும். இந்த ஏரியில் உள்ள நீர்நிலைகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. ஏரியில் படகு சவாரி, மீன்பிடித்தல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளும் செய்யப்படுகின்றன.

நீர்நிலை பாதுகாப்பு: உத்திரமேரூர் ஏரி ஒரு முக்கியமான நீர்நிலையாகும். இந்த ஏரியை பாதுகாப்பது அவசியம். ஏரியின் கரைகளை பலப்படுத்துதல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Updated On: 26 Dec 2023 4:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்