/* */

பரந்தூர் விமான நிலையத்திற்கு 218 பேரிடம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை

புதிய விமான நிலையத்திற்காக நிலம் எடுக்கும் பணிக்கு, தமிழக தொழில் துறை அதிகாரப்பூர்வ முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

பரந்தூர் விமான நிலையத்திற்கு 218 பேரிடம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை
X

கோப்புப்படம் 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், புதிய விமான நிலையத்திற்காக நிலம் எடுக்கும் பணிக்கு, தமிழக தொழில் துறை நேற்று, அதிகாரப்பூர்வ முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணியில் முதலாவதாக, பொடவூர் கிராமத்தில், 93 ஏக்கர் நிலம், 218 நபர்களிடம் இருந்து வாங்கப்பட உள்ளது.

சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வரும் பயணியர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப, கூடுதல் விமானங்களை இயக்க வேண்டியுள்ளது.

இதனால், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு, சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,250 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது

இதில், 1,500 ஏக்கர் அரசு நிலம்; மீதி, பட்டாதாரர்களிடம் இருந்து வாங்கப்பட உள்ளது. இதற்காக 20 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு, கடந்த 2022 ஆகஸ்டில் வெளியானது. அதன் பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது

இந்நிறுவனம், விமான நிலையம் அமைக்க தேவையான விரிவான தொழில்நுட்பம், செலவு குறித்த ஆய்வை, ஒப்பந்த நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்கிறது. தற்போது அந்நிறுவனம், வரைவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதேநேரம், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, சில இடங்களில் உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சென்னை, தலைமை செயலகத்திற்கு அழைத்து, கூடுதல் இழப்பீடு வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக, அமைச்சர்கள் பேச்சு நடத்தினர். அதில் தீர்வு ஏற்படவில்லை.

இருப்பினும் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை எடுப்பதற்கான நிர்வாக அனுமதியை, கடந்த 2023 நவம்பரில் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த பணிக்காக, மாவட்ட வருவாய் அதிகாரிகள், துணை ஆட்சியர்கள் தலைமையில், பல குழுக்களை அரசு நியமித்தது.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான முதல் அறிவிப்பை, தொழில் துறை வெளியிட்டுள்ளது. அதில், 20 கிராமங்களில் முதலாவதாக, காஞ்சிபுரத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் முதற்கட்டமாக, பொடவூர் கிராமத்தில் உள்ள, 93 ஏக்கர் நிலம், 218 நபர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கு, பொது அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளர்களுக்கும் தனித்தனியே,'நோட்டீஸ்' தரப்படும். அவர்கள், 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

அதன் மீது, ஏப்., 4ம் தேதி விசாரணை நடத்தப்படும். அரசு அறிவித்தபடி நிலம் வழங்குவோருக்கு, சந்தை மதிப்பை விட கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.

Updated On: 25 Feb 2024 5:34 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  4. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  5. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  6. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  7. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  8. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  9. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  10. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...