/* */

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணி: அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் அவதி

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணி: அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் அவதி
X

வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் சாலை.

மதுரைமாவட்டம்சோழவந்தான் அருகே தச்சம்பத்து பகுதியில் மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தச்சம்பத்து பகுதியில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக ஜே சி பி எந்திரம் மற்றும் ராட்சத கிரேன் மூலம் குடிநீர் குழாய்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் பள்ளங்களை தோண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் தச்சம் பத்து முதல் மேலக்கால் பாலம் வரை உள்ள சாலை ஓரங்களில் பெரிய பள்ளங்களை தோண்டி குடிநீர் குழாய்களை பதித்து விட்டு அதை மூடும் போது முறையாக சாலையை சரி செய்யாமல் விட்டு செல்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தச்சம்பத்து பகுதியில் சிறிய மழை பெய்தாலே சேரும் சகதியும் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் கார்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி குடிநீர் குழாய்களை பதித்த பின்பு அதை முறையாக சரி செய்ய வேண்டும் என்றும், பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 4 Nov 2023 5:44 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  2. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  3. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  4. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  6. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  7. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  8. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  9. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?