/* */

நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள்: ஆட்சியர் அறிவிப்பு

நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துப்படும் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள்: ஆட்சியர் அறிவிப்பு
X

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு மதுரையிலிருந்து ,ஹெலிகாப்டர் மூலம் பொருட்கள் அனுப்பப்படுகிறது.

நிவாரணப் பொருள்களை கொண்டு செல்ல ராணுவ ஹைலிகாப்டர்கள்:

மதுரை:

மதுரை விமான நிலையத்திலிருந்து5 ஹெலிகாப்டர்கள் மூலம் சுமார் 10,136 கிலோ நிவாரண பொருட்கள் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து, அவசர கால சேவையாக மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் குழுவினர் நிவாரண பொருட்களை தாமாக முன்வந்து ஹெலிகாப்டரில் ஏற்ற உதவினர்.

நாளை ,இரண்டாவது நாள் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட இந்திய கடற்படையை சேர்ந்த ஏழு வீரர்கள் விமானப்படையை சேர்ந்த 17 வீரர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட குழுவினர் மதுரை விமான நிலைய மத்திய பாதுகாப்பு குழுவின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாளை காலை 6 மணி முதல் நிவாரண பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் தூத்துக்குடி செல்லும் என ,அதிகாரிகள் கூறினர்.

தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மதுரை மாவட்டம், நிர்வாகம் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் ஐந்து ஹெலிகாப்டர்கள் மூலம் (கோவை சூலூர் விமானப்படை ஹெலிகாப்டர்- 4, இந்திய கடலோர காவல் படை ஹெலிகாப்டர்-1) மூலம் இன்று (19.12.2023) 05.50 மணி முதல் மதியம்2.00 மணி வரை 9 முறை நிவாரண பொருட்கள் 9980 கிலோ (தண்ணீர் பாட்டில், பிரட் ,பால் பவுடர், பிஸ்கட் மற்றும் மருந்து மாத்திரைகள்) ஆகியவை தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம், தூத்துக்குடி ரயில் நிலையம், தூத்துக்குடி துறைமுகம், ஆழ்வார் திருநகரி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

இதில், கடைசியாக (10வது பயணம்) மதியம் 2.00 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர், தூத்துக்குடியில் வானிலை சரியில்லாத காரணத்தினால் 900 கிலோ நிவாரண பொருட்களுடன் மீண்டும் மதுரை விமான நிலையம் வந்து தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண பொருட்களை, மதுரை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் அனுப்பும் பணியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் , கோவை ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மதுரை ஆர்டிஓ ஷாலினி, மதுரை மேலூர் ஆர்டிஓ ஜெயந்தி, உசிலம்பட்டி ஆர்டிஓ ரவிச்சந்திரன், வரவேற்பு தாசில்தார் கோபி ஆகியோர் முன்னின்று இந்த பணிகளை செய்தனர்.

மேலும் ,நிவாரண பொருட்களை உள்ளே கொண்டு செல்ல போதுமான ஆட்கள் இல்லாததை தொடர்ந்து, மத்திய தொழிற்பது காப்பு படை துணை கமாண்டணட் விஸ்வநாதன் ஏற்பாட்டின் பேரில் 25 மதிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்ல உத்தரவிடப்பட்டது.

மேலும், ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் அடங்கிய குழுவினர் நிவாரண பொருட்களை விமான நிலையத்தின் ஓடுபாதையில் உள்ள ஹெலிகாப்டர் அருகே கொண்டு சென்று ஹெலிகாப்டரில் ஏற்றினர்.

மேலும் ,அவசரகால நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல தற்போது கூடுதலாக இரண்டு ஹெலிகாப்டர்கள் (கோவை சூலூர் இந்திய விமானப்படை - 1) மற்றும் சென்னை கடலூர் காவல் படை - 1) மதுரை விமான நிலையம் வந்துள்ளது.

நாளை (20.10.2023) காலை 06.00 மணி முதல், 7 ஹெலிகாப்டர்கள் மூலம் மீண்டும் நிவாரண பொருட்கள் மதுரை விமானத்திலிருந்து அனுப்பும் பணி தொடங்க உள்ளது.

Updated On: 20 Dec 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்