/* */

கீழமாத்தூர் மணிகண்டன் ஆலய மகா கும்பாபிஷேகம்

கீழ மாத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு உமா மகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கீழமாத்தூர் மணிகண்டன் ஆலய மகா கும்பாபிஷேகம்
X

கீழமாத்தூர் அருள்மிகு உமா மகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள்.

மதுரை மாவட்டம், கீழ மாத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு உமா மகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கிராம தெய்வங்களுக்கு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, திக்பலி, ரக்க்ஷாபந்தன், கும்ப லங்காரம், வேத பாராயணம், முதல் நாள் யாக வேள்வி நடைபெற்றது.

தொடர்ந்து, நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் அதனைத் தொடர்ந்து மாலை மூன்றாம் காலயாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று காலை 6 மணி அளவில் நான்காம் காலயாக பூஜை ஆரம்பிக்கப்பட்டு, காலை 9 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தர மாணிக்க பெருமாள் அருள்மிகு ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை, தக்கார் சங்கரேஸ்வரி, செயல் அலுவலர் இளமதி மற்றும் பணியாளர்கள் உபயதாரர்கள் பாலாஜி விவேகானந்தா உள்பட கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 21 Jan 2024 8:38 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?