/* */

சென்னையில் மார்ச் 2-ல் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு: நிர்வாகி.

United Communist Party of India State Conference சென்னையில் மார்ச் ,2 -ம் தேதி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடுமதுரையில் மாநிலச் செயலாளர் பாஸ்கரன் பேட்டியளித்தார். சென்னையில் வருகிற மார்ச் 2 -ம் தேதி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் மார்ச் 2-ல் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு: நிர்வாகி.
X

மதுரையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் பாஸ்கரன் பேட்டியளித்தார்.

United Communist Party of India State Conference

மதுரையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாஸ்கரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில ஸ்தாபன மாநாடு, வருகின்ற மார்ச் மாதம் 2-ம் தேதி சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையிலுள்ள காமதேனு திருமண மண்டபத்தில் நமது கட்சியின் தமிழ் மாநிலக் குழு அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற உள்ளது. இந்த மாநில மாநாட்டில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினை வழி நடத்துவதற்காக புதிய மாநில தலைவர் மற்றும் மாநில செயற்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பாஜகவை அகற்றுவதற்காக இடதுசாரி ஜனநாயக கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி, இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவது குறித்து, மாநாட்டில் ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியில் இடம் பிடித்து உள்ள திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக உள்ள அனைத்து இடதுசாரி ஜனநாயக கட்சிகளையும் அழைப்பது என முடிவு எடுத்து உள்ளோம். இந்த மாநாட்டில் சுமார் 500 நிர்வாகிகளுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை நாங்கள் ஆதரிக்கின்றோம். மேலும், 'தமிழக வெற்றி கழகம்' கட்சியினை அஷ்டமி தேதியன்று துவங்கியது நல்ல பகுத்தறிவினை காட்டியுள்ளது.

இந்த காலத்தில் கட்சி அறிவித்து உள்ளது யாரோ இவர் பின்னணியில் உள்ளதாக, எங்களுக்குள் சந்தேகம் எழுந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெத்தாட்சி ஆசாத், முல்லை முருகன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் ஹனிபா விஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 4 Feb 2024 8:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு