மதுரை மாவட்ட கோயில்களில், ஆடிக் கார்த்திகை விழா:..!

மதுரை மாவட்ட கோயில்களில், ஆடிக் கார்த்திகை விழா:..!
X

ஆடிக்கார்த்திகை விழா.

மதுரை மாவட்ட கோயில்களில், ஆடி கார்த்திகை விழா சிறப்பாக நடந்தது.

மதுரை மாவட்ட கோயில்களில், ஆடி கார்த்திகை விழா சிறப்பாக நடந்தது.

மதுரை.

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில் களில், ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கோயில்களில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அரசனைகள் வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை அருகே அழகர்கோவில் பழமுதிர்சோலையில் முருகனுக்கு, சிறப்பு அபிஷேகமும், திருப்பரங்குன்றம் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், மதுரை அண்ணா நிலையம்,பூங்கா முருகன் ஆலயத்தில் முருகனுக்கு சிறப்பு வழிபாடும், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்தில், வள்ளி தெய்வானை சமேத, சுப்பிரமணியருக்கும், மதுரை தாசில்தார்நகர் மேல்மடை சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் பால

முருகனுக்கும், மதுரை தாசில்தார் நகர்சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை கோமதிபுரம் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சணைகள் நடைபெற்றது. பக்தர்கள் ,கலந்து கொண்டு முருகருமானுக்கு, சிறப்பு பூஜைகளை செய்தனர்.பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகங்கள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஆடிக் கார்த்திகை என்பது ஆடித் திங்கள் கார்த்திகை நாளில் கொண்டாடப்படும் இந்து சமய விழாவாகும். இவ்விழா நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இது தென்னிந்தியா, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்து பிறநாடுகளில் வாழும் இந்து மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Next Story
ai in future agriculture