நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜ    சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா
X

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

நாமக்கல்,

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், சட்ட மேதை அம்பேத்காரின் 134வது பிறந்தநாள் விழா, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. மாவட்ட பாஜ தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, அம்பேத்காரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நகர தலைவர் தினேஷ், தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபு, நகர பொதுச்செயலாளர் சதீஷ், நகர செயலாளர் வேல்ராஜ் பெரியசாமி, விவசாய அணி செயலாளர் சத்தியபானு, சிவகுமார், உதயகுமார் உள்ளிட்ட திளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்பேத்காரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Next Story