10ம் வகுப்பு பிராக்டிக்கல் தேர்வு துவக்கம் நாமக்கல்லில் 19,038 மாணவர்கள் பங்கேற்பு

10ம் வகுப்பு பிராக்டிக்கல் தேர்வு துவக்கம்    நாமக்கல்லில் 19,038 மாணவர்கள் பங்கேற்பு
X

பைல் படம்

நாமக்கல்,

10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பிராக்டிக்கல் தேர்வு இன்று துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், 295 பள்ளிகளை சேர்ந்த 19,038 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு, பிளஸ் 2வகுப்பிற்கு, மார்ச் 3ல் தொடங்கி 25 வரையும், பிளஸ் 1 வகுப்பிற்கு, மார்ச் 5ல் தொடங்கி 27 வரையும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 28ல் தொடங்கி ஏப். 15 வரையும் நடைபெறுகிறது.

முன்னதாக பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பிற்கான பிராக்டிக்கல் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு கடந்த 7ம் தேதி துவங்கி 14 வரையும், பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, கடந்த 15ல் தொடங்கி 21ம் தேதி வரையும் நடைபெற்றது. பிளஸ் 2 பிராக்டிக்கல் தேர்வில், 14,402 மாணவர்களும், பிளஸ் 1ல் 14,569 மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். இந்த தேர்வு மாவட்டம் முழுவதும் 148 மையங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பிராக்டிக்கல் தேர்வு இன்று துவங்கியது. இத்தேர்வு, வரும் 28 வரை நடக்கிறது. அதற்காக 148 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, சுயநிதி பள்ளிகள் என, மொத்தம் 295 பள்ளிகளைச் சேர்ந்த 10,005 மாணவர்கள், 9,033 மாணவியர் என மொத்தம், 19,038 பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்காக 92 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story