100 நாள் வேலைத்திட்ட கூலி நிலுவையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத்திட்ட கூலி நிலுவையை    வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம் 

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தில், செய்த வேலைக்கு கூலி நிலுவையை வழங்க வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்,

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தில், செய்த வேலைக்கு கூலி நிலுவையை வழங்க வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு, 100 வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், வேலைக்குச் சென்ற தொழிலாளர்களுக்கு, கூலி நிலுவைத்தொகையை வழங்கக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

100 நாள் வேலைத்திட்டதிற்கு, வேலை ஆட்களை குறைக்காமல் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். வேலை செய்த அனைவருக்கும் கூலி பாக்கியை வட்டியுடன் வழங்க வேண்டும். இத்திட்டத்தை 200 நாட்களாக அதிகப்படுத்தி தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும். ஒரு நாள் சம்பளம் ரூ. 700 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Next Story