/* */

கடிதம் எழுதி வைத்துவிட்டு பேக்கரி ஊழியர் தற்கொலை!

பள்ளிபாளையம் அருகே பேக்கரி ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை. பள்ளிபாளையம் போலீசார் விசாரணை.செய்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

கடிதம் எழுதி வைத்துவிட்டு பேக்கரி ஊழியர் தற்கொலை!
X

பேக்கரி ஊழியர் தற்கொலை

பள்ளிபாளையம் அருகே பேக்கரி ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை. பள்ளிபாளையம் போலீசார் விசாரணை.செய்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் சின்ன கொல்லப்பட்டி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், (24.)

பள்ளிபாளையத்தில் செயல்படும் தனியார் பேக்கரியில், மாஸ்டராக கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சேலம் சொந்த ஊருக்கு சென்ற அவர், நேற்று இரவு பள்ளிபாளையம் வந்துள்ளார் .. அப்பொழுது நாளை காலை முதல் பணிக்கு வருவதாக பேக்கரி உரிமையாளர் மணிகண்டனிடம் தெரிவித்துவிட்டு டிவி.எஸ்.மேடு பகுதி அருகே உள்ள நடேசன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பில் ,உள்ள தனது தனி அறைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் காலை நீண்ட நேரம் ஆகியும் கார்த்திகேயன் வேலைக்கு வராததால் பேக்கரி உரிமையாளர் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது அவர் துப்பட்டாவில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் .

அங்கு விரைந்த போலீசார், கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் கார்த்திகேயன் உடலை சோதனையிட்ட பொழுது, அதில் ஒரு கடிதம் இருந்தது. அதில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் தானே தான் எனவும், வேறு யாரும் காரணம் இல்லை என்பதை எழுதி வைத்துவிட்டு துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய செல்போனில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் அழித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது . வாலிபர் கார்த்திகேயன் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?

அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 16 Dec 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?