/* */

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

குமாரபாளையம் நகர தி.மு.க சார்பில், நீர் மோர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா.செந்தில் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்களை வழங்கினார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

குமாரபாளையம் நகர தி.மு.க சார்பில், நீர் மோர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா.செந்தில் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்களை வழங்கினார்.

குமாரபாளையம் நகர தி.மு.க சார்பில், நீர் மோர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா.செந்தில் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்களை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் கடுமையாகி, வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் தி.மு.க சார்பில் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் நகர தி.மு.க சார்பில் குமாரபாளையம் மேற்கு காலனி பேருந்து நிறுத்தம் பகுதியிலும், பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர், தண்ணீர் பந்தல்களை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் திறந்து வைத்தார். நீர்மோர், தர்பூசணி பழங்கள், வெள்ளரிப்பிஞ்சுகள், நுங்கு, இளநீர், குளிர்பானங்கள், உள்ளிட்ட தாகம் தணிக்கும் உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

குமாரபாளையம் பாசம் அதரவற்றோர் மையம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

கோடை காலம் வந்தால் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்ப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு எந்த அரசியல் கட்சியினரும் நீர் மோர் பந்தல் இதுவரை திறக்கவில்லை. தேர்தல் விதுமுறை ஒரு காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் தாகம் தீர்க்க, குமாரபாளையம் பாசம் அதரவற்றோர் மையம், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திரனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில், பாசம் மைய அமைப்பாளர் குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க அமைப்பாளர் பராசக்தி தலைமை வகித்தனர்.

நீர் மோர் பந்தல் திறப்பு விழா பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதியில் நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி பங்கேற்று, நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா பங்கேற்று பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, அன்னாசி பழம், இளநீர் வழங்கினார். இதில் தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம், பொதுநல ஆர்வலர் பன்னீர்செல்வம், உள்பட பலர் பங்கேற்றனர். கோடை வெப்பம் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு நீர்மோர் வாங்கி பருகினர்.

Updated On: 4 May 2024 3:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...