கர்நாடகா போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 31ல் நெய்வேலியில் அனல்நிலையம் முற்றுகை: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வேலுசாமி, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர்.
நாமக்கல்,
மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கார்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் வருகின்ற மார்ச் 11-ந்தேதி தமிழக எல்லைப் பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதை கண்டிக்கும் வகையில் மார்ச் 31ம் தேதி நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு மின்சாரம் அனுப்புவதை தடை செய்யக்கோரி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாதுவில் அணைக்கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கருக்கு மேல் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி இல்லாமல் விவசாயம் இல்லாமல் பொய்த்து விடும். தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்கள் காவிரி குடிநீரையே நம்பியுள்ளனர். அங்கு அணை கட்டினால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேகேதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தின் காவிரி உரிமை பறிப்போகும். இத்திட்டத்தை கர்நாடக அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தின் உரிமைக்காக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபடும்.
கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் நடத்தும் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழகத்தில் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரம், ஒரு யூனிட் கூட கர்நாடகாவிற்கு கொடுக்காமல் இருளில் மூழ்கடிக்கும் வகையில், நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில், தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி, மார்ச் 31-ந்தேதி நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு மின்சார உற்பத்தியை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu