டைரக்ட் டூ சிஸ்டம் செல்போன் சேவைக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அனுமதி : எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

டைரக்ட் டூ சிஸ்டம் செல்போன் சேவைக்கு  பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அனுமதி :  எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
X

ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார்.

மலைப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு செல்போன் மற்றும் இண்டர்நெட் சேவை வழங்குவதற்காக, டைரக்ட் டூ டிவைஸ் சேவைக்கு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என பார்லியில், ராஜேஷ்குமார் எம்.பி.யின் கேள்விக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதில் அளித்தார்.

நாமக்கல்,

டில்லியில் நடைபெற்று வரும் பார்லி கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் ஜீரோ அவர்ஸ் கேள்வி நேரத்தில், ராஜ்யசபா திமுக எம்.பி., நாமக்கல் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில், செயற்கைக்கோலில் இருந்து நேரடியாக செல்போனுக்கு சிக்னல் வழங்கும் டைரக்ட் டூ டிவைஸ் சிஸ்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு இணைப்புகள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கப்படவேண்டும். இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம், தொலைத்தொடர்பு வசதி இல்லாத மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் செல்போன் மற்றும் இண்டர்நெட் வசதி வழங்க முடியும். இதற்கான லைசென்ஸ் தனியாருக்கு வழங்கினால் அவர்கள் வியாபார நோக்கில் செயல்படுவர்களே தவிர, மக்களுக்கு தேவையான அளவில் சேவைகளை வழங்கமாட்டார்கள். எனவே இந்த டைரக்ட் டூ டிவைஸ் தொழில்நுட்பம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கப்படுமா ? என கேள்வி எழுப்பினார்

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா; தொலைத் தொடர்பு வசதிகளே இல்லாத கிராமங்களுக்கு செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை வழங்குவதற்கு, டைரக்ட் டூ டிவைஸ் திட்டம் பெரும் உதவியாக இருக்கும். எனவே டைரக்ட் டூ டிவைஸ் திட்டத்தின் கீழ், தற்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மட்டுமே அந்த தொழில்நுட்பம் வழங்கப்படும், விரைவில் அதன் சேவை துவங்கும். மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 18 மாதங்களில் 10,448 புதிய செல்போன் டவர்களை அமைத்துள்ளது. அதில் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் விரைவில் அவைகள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story