காலாவதி குளிர்பானம் விற்பனை, 12 கடைகளுக்கு அபராதம்

காலாவதி குளிர்பானம் விற்பனை, 12 கடைகளுக்கு அபராதம்
X
குளிர்பான கடைகளில் காலாவதி பொருட்கள், உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை

காலாவதி குளிர்பானம் விற்றதால் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் வெயில் வாட்டுவதால் ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தப் பானங்கள் தரமாகவும் சுகாதாரமாகவும் விற்பனை செய்யப்படுவதை உணவு பாதுகாப்புத் துறையினர் உறுதி செய்து வருகின்றனர்.

இதற்காக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர், மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் நான்கு சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளனர். இக்குழுக்கள் மேற்கொண்ட ஆய்வில், 121 கடைகளில் சோதனை செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் 12 குளிர்பான கடைகளில் சுகாதாரம், தரம் இல்லாததும், காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அத்தகைய கடைகளுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture