/* */

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி..!

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி  மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி..!
X

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், நாமக்கல் அருகே உள்ள மரூர்ப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு, கிராம வளங்கள் குறித்து படங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.


நாமக்கல்,

முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், நாமக்கல் அருகே கிராமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பி.எஸ்சி., வேளாண்மை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கிராமப்புறம் வேளாண்மை குறித்து நேரடியாக தெரிந்துகொள்ள்ளும் வகையில் கிராமங்களில் தங்கி பயிற்சி பெறுவது கட்டாயமாகும். திருச்சி மாவட்டம் முசிறி எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிராமங்களில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் மரூர்ப்பட்டி பஞ்சாயத்து பகுதிகளில் தங்கி, வேளாண்மை குறித்த இருந்து பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சியில் ஒருபகுதியாக மாணவர்கள், மரூர்ப்பட்டி பஞ்சாயத்து தலைவர் சுசீலா மற்றும் துணைத் தலைவர் துரைசாமி தலைமையில், ஊர் பொது மக்களின் வழிகாட்டுதலோடு பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு (பிஆர்ஏ) பயிற்சிகள் மேற்கொண்டனர். பயிற்சியில் மரூர்ப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கிராம வரைபடம் மற்றும் கிராமத்தின் வளங்கள் குறித்து படங்களை வரைந்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

Updated On: 4 May 2024 5:45 AM GMT

Related News