Agriculture Biological Control Lab ரூ. 1.25 கோடி மதிப்பிப்பீட்டில் வேளாண் உயிரியில் நோய் கட்டுப்பாட்டு ஆய்வகம் அடிக்கல் நாட்டுவிழா:எம்.பி பங்கேற்பு

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ரூ. 1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள, வேளாண் துறையின் உயிரியில் நோய் கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு, ராஜேஷ்குமார் எம்.பி. அடிக்கல் நாட்டினார். அருகில் கலெக்டர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.
Agriculture Biological Control Lab
நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறையின் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. அதே இடத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டுடம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 3860 ச.அடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டு, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்யும் அறை, கிரைசோபெர்லா உற்பத்தி அறை, உயிரியல் காரணிகள் வளர்ப்பு அறை, மூலப்பொருட்கள் இருப்பு அறை, கருவிகள் அறை மற்றும் அலுவலகம் அடங்கிய கட்டடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
இந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் மூலம் உயிரியல் முறையில் ஒட்டுண்ணி, எதிர்உயிரி பாக்டீரியா, பூஞ்சாணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை தாக்கக்கூடிய கட்டுப்படுத்துவதற்கு பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த உபயோகப்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக இவை செயல்படுகின்றன. இதனால் மண்வளம், மனித இனம், கால்நடைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல்களுக்கு ஏற்படும் பாதிப்பினை தடுக்க இயலும். டிரைகோடெர்மா விரிடி மற்றும் பிவேரியா பேசியானா ஆகிய உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் கரும்பு, நெல், பருத்தி மற்றும் காய்கறி பயிர்களில் புழுத்தாக்குதலை கட்டுப்படுத்தவும், தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த கிரைசோபெர்லா இரைவிழுங்கியும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் எதிர் உயிரிகள் நாமக்கல், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், சேலம். பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல்லில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வேளாண்மை துறையின் சார்பில் ரூ. 1.25 கோடி மதிப்பில், புதிய உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆய்வகம் கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu