/* */

காலாவதியான ரொட்டியை விற்பனை செய்த பேக்கரி லைசென்ஸ் ரத்து? : நுகர்வோர் கோர்ட் உத்தரவு

Bakery Case Consumer Court Order காலாவதியான பொருளை விற்பனை செய்ததாக பேக்கரி மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

காலாவதியான ரொட்டியை விற்பனை செய்த பேக்கரி    லைசென்ஸ் ரத்து? : நுகர்வோர் கோர்ட் உத்தரவு
X

பைல் படம் 

Bakery Licence Cancelled Consumer Court Order

காலாவதியான ரொட்டியை விற்பனை செய்த பேக்கரியின் லைசன்ஸை ரத்து செய்யவும், வாடிக்கையாளருக்கு, இழப்பீடாக ரூ. 4,000 வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் அடுத்த சின்ன வேப்பநத்தத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (59). அவர், 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நாமக்கல் பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் பேக்கரி ஒன்றில், கோதுமை பிரட் பொட்டலம் ஒன்றை வாங்கினார்.

வீட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு பிரட்டை கொடுப்பதற்கு முன் பார்த்தபோது, அவர் வாங்கி வந்த பிரட் காலாவதியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதற்கு பதில் அளிக்கும்படி, கோர்ட்டில் இருந்து பேக்கரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட சம்பந்தப்பட்ட பேக்கரி உரிமையாளர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. விசாரணை முடிந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு, பேக்கரி உரிமையாளர், இழப்பீடாகவும், வழக்கு செலவு தொகையாகவும் ரூ. 4,000, 4 வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஒரு வார காலத்துக்குள், பேக்கரி உரிமையாளர் கோர்ட்டில் ஆஜராகி காலாவதியான உணவுப் பொருட்களை பொருளை விற்பனை செய்ய மாட்டோம் என்ற உறுதி மொழியையும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், ஏன் உணவுப் பொருள் விற்பனை லைசன்ஸை ரத்து செய்யக்கூடாது என்பதற்கு தகுந்த விளக்கத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். உறுதி மொழியை சமர்ப்பிக்க தவறினாலும், விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றாலும், லைசென்ஸ் ரத்து செய்ய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிடப்படும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Feb 2024 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு