/* */

திருச்செங்கோடு பகுதியில் மத்திய அரசின் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சி

Central Govt Awareness Programme திருச்செங்கோடுபகுதியில் நடைபெற்று வரும் மத்திய அரசின், நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குஜராத் எம்.பி. கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு பகுதியில் மத்திய அரசின் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்று வரும் மத்திய அரசின், நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குஜராத் எம்.பி. ரமீலாபென் பாரா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Central Govt Awareness Programme

திருச்செங்கோடுபகுதியில் நடைபெற்று வரும் மத்திய அரசின், நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குஜராத் எம்.பி. கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில், நடைபெற்று வரும், மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் குழு உறுப்பினரும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த லோக்சபா எம்.பியுமான ரமீலாபென் பாரா நேரில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட சின்ன மணலி, பெரிய மணலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, ரமீலாபென் பாரா எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார். மேலும் பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து மாவுரெட்டிப்பட்டி, கோக்கலை, இலுப்பிலி, அகரம் ஆகிய கிராம் பகுதிகளிலும், வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜ பொருளாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட திரளான பாஜ பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Jan 2024 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  3. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  4. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  5. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  8. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  9. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  10. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!