/* */

வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை அணிவித்து அஞ்சலி

Namakkal news- வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின்  படத்திற்கு முதல்வர் மாலை அணிவித்து அஞ்சலி
X

Namakkal news- நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் காலமாண, தமிழக முதல்வரின் தனி செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை, ரவியின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Namakkal news, Namakkal news today- தமிழக முதல்வர் தனிச்செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை உடல் நல குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து வெண்ணந்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் டி.வி. ரவி (63), இவரது மகன் தினேஷ்குமார். இவர் தமிழக முதலமைச்சரின் தனிச் செயலாளராக உள்ளார். தினேஷ்குமாரின் தந்தை ரவி, சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் வெண்ணந்தூரில் உள்ள தினேஷ் குமாரின் வீட்டிற்கு வந்தார். அங்கு தினேஷ்குமாரின் தந்தை ரவியின் உருவப்படத்திற்கு, அவர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் தினேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் சேலம் விமான நிலையம் சென்று சென்னை திரும்பினார்.

மேலும், கனிமொழி எம்பி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் வருகையை ஒட்டி சேலம் முதல் வெண்ணந்தூர் வரை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ட்ரோன்கள் பறக்கவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

Updated On: 14 May 2024 1:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் 10.317 பேர் ஆப்சென்ட்: 41,278...
  2. கல்வி
    ஜேஇஇ அட்வான்ஸ்டு ரிசல்ட் வெளியீடு: வேத் லஹோட்டி, த்விஜா படேல்
  3. இந்தியா
    தேர்தல் பெட்டிங்கில் இப்படி ஒரு நேர்மை..!
  4. அரசியல்
    என்னை கண்டுகொள்ள ஆள் இல்லை : சந்திரபாபு நாயுடு உருக்கம்..!
  5. இந்தியா
    மோடி 3.0 அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம். யாருக்கெல்லாம்...
  6. இந்தியா
    அச்சத்தை துச்சமாக தூக்கி எறிந்தவர், ஜான்சி ராணி..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. திருத்தணி
    திருத்தணியில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகன் திருமண ...
  10. குமாரபாளையம்
    விவசாயிகளிடம் பண மோசடி : காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட...