/* */

நாமக்கல் மாவட்டத்தில், 23 அரசுத் துறை கட்டிடங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் திறப்பு

CM Inagurated 23 New Buildings நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், பள்ளி வகுப்பறைகள் என மொத்தம் ரூ.9.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, 23 புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில், 23 அரசுத் துறை கட்டிடங்கள்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் திறப்பு
X

நாமக்கல் மாவட்டத்தில், 23 புதிய அரசுத் துறை கட்டிடங்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து ராசம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜ்யசபா எம். பி. ராஜேஷ்குமார் குத்து விளக்கேற்றி வைத்தார். 

CM Inagurated 23 New Buildings

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், ராசாம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய கட்டிடத்தில், ராஜ்யசபா எம்.பி. ராஜேஸ்குமார் குத்து விளக்கேற்றி வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரேஷன் கடைகளில் தரமான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவ செல்வங்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கியவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. அவர் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவு பசியை போக்கும் முன், அவர்களது வயிற்று பசியைப் போக்கிட வேண்டுமென்று, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிய நவீன வகுப்பறை கட்டடங்களையும், கூடுதல் ஆசிரியர் நியமனங்களையும் முதலமைச்சர் நியமித்து வருகிறார்என அவர் பேசினார்.

எம்.எல்.ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில், ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள, பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம், ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து அலுவலக கட்டடங்கள், ரூ.4.63 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 15 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்பறைக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.9.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 புதிய கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Updated On: 26 Dec 2023 7:00 AM GMT

Related News