/* */

ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
X

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில், நகராட்சி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளில், ரூ.11.67 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ராசிபுரம் நகராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் பழைய பஸ் நிலையத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் அடுக்குமாடி வாகனம் நிறுத்தும் இடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தெடர்ந்து, ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் கோனேரிப்பட்டி ஏரி தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டார். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர், திருச்செங்கோடு நகராட்சி, அனிமூரில் ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு, கிடங்கில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், மட்கும் குப்பைகளான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து நுண் உரம் தயாரிக்கப்படுவது குறித்தும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவது குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட, கொல்லப்பட்டியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டும் பணி, ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு மலை அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி மற்றும் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் காலனி, நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதியதாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமானப் பணி என மொத்தம் ரூ. 11.67 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று நலத்திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 17 May 2024 10:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : சென்னையில் EV சார்ஜிங் நிலையம் அறிமுக நிகழ்ச்சி || #ev...
  2. லைஃப்ஸ்டைல்
    தினமும் அடிக்கடி முகம் கழுவுபவரா நீங்க...?
  3. சினிமா
    தனியா உக்காந்து பாத்துடாதீங்க..! அப்றம் பயந்து போயிடுவீங்க..!
  4. வீடியோ
    எனக்கு இப்படி ஒரு படம் கெடச்சது சந்தோசம் Vani Bhojan ! |#anjaamai...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையாரை தரிசனம் செய்த அண்ணாமலை
  6. வீடியோ
    Garudan Movie-ய Friends எல்லாம் சேந்து பாக்கலாம் !! #garudan #soori...
  7. விளையாட்டு
    இந்தியா - வங்கதேசம் லைவ் மேட்ச் எங்க பாக்கலாம்?
  8. விளையாட்டு
    இந்தியா - வங்கதேசம் டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்..!
  9. வீடியோ
    Garudan படத்தில செம்ம Goosebumps சீன்ஸ் இருக்கு !! #soori #hero ...
  10. சோழவந்தான்
    வாடிப்பட்டியில் ஆன்மீக பயிற்சி வகுப்பு