Cpim Agitation Against Smart Meter மின்சார ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிடக்கோரி சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், மின் இணைப்பில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிடக்கோரி, வையப்பமலை மின்வாரிய அலுவலகம் முன் சிபிஐஎம் சார்பில் கண்டன ஆரப்பட்டம் நடந்தது. நடைபெற்றது.
Cpim Agitation Against Smart Meter
திருச்செங்கோடு தாலுகா, வையப்பமலை மின் வாரிய அலுவலகம் முன்பு சிபிஐஎம் சார்பில், மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிடக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐஎம் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆரப்பாட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறிகளுக்கு வழங்கும் மானிய மின்சாரம் ஆகியவை தடைபடும். பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து வருவதைப் போல் சிறு, குறு தொழில் செய்பவர்கள், குடியிருப்பு வீடுகள், விவசாய தோட்டங்கள் என பல்வேறு வகையில் பயன்படுத்தும் மின் கட்டணம் உயர்ந்து கொண்டே போகும் அபாயம் ஏற்படும். தமிழகத்தில் மின்சாரத்துறை முறை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைசாமி, ஈஸ்வரன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu