/* */

கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ அஞ்சல் வழி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி, புதிய பாடத்திட்டத்தின்படி, விரைவில் தொடங்கப்படவுள்ளது.

HIGHLIGHTS

கூட்டுறவு மேலாண்மை  டிப்ளமோ அஞ்சல் வழி   பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம் 

கூட்டுறவு மேலாண்மை அஞ்சல் வழி டிப்ளமோ பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-2024 ஆம் ஆண்டுக்கான, அஞ்சல் வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள தகவல்: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-24 ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி, புதிய பாடத்திட்டத்தின்படி, விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கு www.tncuicm.com என்ற வெப்சைட் மூலம் ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நவ. 30ம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்காலம். விண்ணப்ப கட்டணம் ரூ.100ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, +2 தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற வெப்சைட் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் சேலம் மெயின் ரோட்டில், முருகன் கோயில் பஸ் ஸ்டாப் அருகில் அமைந்துள்ள்ள, நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04286-290908, 9080838008 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Nov 2023 9:15 AM GMT

Related News