2026 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அகற்றம்: பாஜக ராம சீனிவாசன் பேட்டி

2026 சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி  அகற்றம்:  பாஜக ராம சீனிவாசன் பேட்டி
X

நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதிய கூட்ட அரங்கை, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் திறந்து வைத்தார். 

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என பாஜக மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என பாஜக மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.

நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் பாஜக மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு புதிதாக கூட்ட அரங்கு கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய கூட்ட அரங்கை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்தியில் பாஜக வலிமையற்ற ஆட்சி அமைந்துள்ளது என்றும் அவர்களால் லோக்சபா சபாநாயகரை தேர்வு செய்ய முடியாது என்றும் இண்டி கூட்டணியினர் நினைத்து, போட்டி வேட்பாளரை நிறுத்தினார்கள். ஆனால் மீண்டும் ஓம்பிர்லா லோக்சபா சபாநாயகராக தேர்வு பெற்று, பாஜக வலிமையான அரசு என்பதை நிரூபித்துள்ளார். அவர் பதவியேற்றதும், 1975ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற, அவசர நிலை பிரகடனம் குறித்து பேசினார். அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நாளை நினைவு கூர்ந்தார். அப்போது, அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் போராடினார்கள். தமிழகத்தில் திமுகவினரும் போராடினர்கள். தற்போது பார்லிமெண்டில், அவசர பிரகடனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. செலுத்தப்பட்ட மவுன அஞ்சலியில் கலந்து கொள்ளாமல் திமுக, காங்கிரசுடன் சேர்ந்து புறக்கணித்தது. நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது திமுக ஆதரித்ததா, எதிர்த்ததா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

பார்லிமெண்டில் பதவியேற்றபோது, திமுக எம்.பிக்கள் உதயநிதி ஸ்டாலின் பெயரில் பதவி பிரமாணம் எடுத்தது கேலி கூத்தாக உள்ளது. பதவி பிரமாணம் எடுத்தவர்கள் அண்ணா, பெரியார், கலைஞர் பெயரில் பதவியேற்காமல் ஜுனியர் அமைச்சர் பெயரில் பதவியேற்றது அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பானது.

தமிழக சட்டசபையில் அதிமுவினர் அரசியல் சட்டத்திற்கு எதிராக நடந்துகொண்டதாக அவர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இது என்ன நியாயம்.

விரைவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான முன் ஆய்வு கூட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில எம்.பி.க்கள் நிதி தேவை குறித்து மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக எம்பிக்கள் யாரும் நிதி அமைச்சரை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு நிதி கேட்கவில்லை. கடந்த 10ஆண்டுகளாக தமிழக எம்.பிக்களின் நிலை இப்படித்தான் உள்ளது. மத்திய பட்ஜெட் அறிவித்த பின்னர் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று புலம்புவார்கள்.

தமிழகத்தில் பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களை மாணவர்கள் அணிந்து வரக்கூடாது என்று கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் சாதி வாரியாக கணக்கெடுப்பினை மத்திய அரச நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் கேட்கிறார். இதை மாநில அரசே நடத்தலாம் என்று பல்வேறு கோர்ட்டுகளும், மத்திய அரசும் ஏற்னவே அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பீகாரில் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. தமிழகத்தில் அதை செய்யாமல் மத்திய அரசை குறைகூறிவருவது வேடிக்கையாக உள்ளது.

சமீபத்தில் பார்லிமெண்ட் பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தல் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 3ல் ஒரு பங்கான 78 சட்டசபை தொகுதிகளில், அதிமுகவை பின்னுக்கு தள்ளி, பாஜக 2வது இடத்தைப் பெற்றுள்ளது.

இதையொட்டி பாஜக சார்பில் தொகுதிவாரியாக ஆய்வு நடத்தி, பொதுமக்களை சந்தித்து வாக்களித்தமைக்காக நன்றி தெரிவித்து வருகின்றோம். எங்களுடை முக்கிய குறிக்கோள் வருகிற 2026ம் ஆண்டு தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான். அதற்காக எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நேரத்தில் சரியான கூட்டணியை கட்டமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story