/* */

வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

Farmers Rail Strike Demanding Price வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரியும், நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரியும், மோகனூரில் விவசாய முன்னேற்ற கழகத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார  விலை கோரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
X

வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரி, மோகனூர் ரயில் நிலையம் முன்பு விவசாய முன்னேற்றக்கழ தலைவர் செல்லராஜாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Farmers Rail Strike Demanding Price

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) நிர்ணியக்க கோரியும், நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என வலியுறத்தியும், காவிரியிரில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காத கார்நாடகா அரசைக் கண்டித்தும், விவசாய முன்னேற்ற கழகம் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரயில் நிலையத்தில், நாகர்கோவில் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறியல் செய்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ரயில் நிலையத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால். ரயில் நிலையம் முன்புறம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் முன்னேற்றக் கழக தலைவர் வக்கீல் செல்லராஜாமணி போராட்டத்திற்கு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

Updated On: 10 March 2024 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு