/* */

நாமக்கல் மாவட்ட தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம்

Gold Bond Sales In Post Office நாமக்கல் கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம்
X

பைல் படம் 

Gold Bond Sales In Post Office

நாமக்கல் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . ஒருவர் ஒரு கிராம் முதல் 4,000 கிராம் வரை வாங்கலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8 ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம் . தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்க பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டிற்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 2.5% ஆண்டு வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் . இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும் . இந்த திட்டம் 12.02.2024 முதல் 16.02.2024 வரை அனைத்து தபால் அலுவகங்களிலும் செயல்படும் . இதில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 6,263 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் தங்க பத்திரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமார் 20 நாட்களுக்கு பிறகு தங்க பத்திரம் வழங்கப்படும்.

முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். அவ்வாறு அலுவலகம் செல்ல இயலாதவர்கள் கீழ்க்கண்ட செல்போன் மூலம் அழைத்தால் உங்கள் வீடு தேடி சேவை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9488434443, 9042855559, ஆகிய செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம். இதில் முதலீடு செய்ய முதலீடு செய்பவரின் ஆதார் எண்., பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு மிக மிக அவசியம். கடந்த 2015 ஆம் ஆண்டு தங்கப் பத்திர திட்டத்தில் 100 கிராம் ரூ. 2,68,400 முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு எட்டு ஆண்டுகள் முடிந்து ரூ. 6,13,200 முதிர்வுத் தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. கூடுதலாக அவர்களுக்கு ரூ.53,680 வட்டியாக வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதிக லாபம் தரக்கூடிய தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Feb 2024 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்