/* */

நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர் ஆப்சென்ட்

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில், இன்று 11 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் மொத்தம் 6,180 பேர் தேர்வு எழுதினார்கள். 120 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு  6,180 பேர் பங்கேற்பு: 120 பேர் ஆப்சென்ட்
X

Namakkal news- நாமக்கல் தனியார் பள்ளி நீட் தேர்வு மையத்தில், தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவியர், தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில், இன்று 11 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் மொத்தம் 6,180 பேர் தேர்வு எழுதினார்கள். 120 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்பிற்காக, தேசிய தேர்வு முகமை மூலம் (என்டிஏ) இன்று நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் மொத்தம் 23,81,833 மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். தேசிய அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சுமார் 1,88,398 இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 1,55,216 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் மொத்தம் 6,300 மாணவ மணவிகள் இந்த தேர்வை எழுத விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். இந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் ஏற்கனவே பிளஸ் முடித்து நீட் தேர்வை எழுதி தோல்வியுற்றவர்கள் மற்றும் எதிர்பார்த்த அளவு மதிப்பெண்கள் கிடைக்காதவர்கள் (ரிப்பீட்டர்ஸ்) உள்ளிட்டோர் இந்த தேர்வில் கலந்துகொண்டனர். வெளியூர் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அதிகாலை முதலே தேர்வு மையங்களுக்கு வெளியில் காத்திருந்தனர்.

காலை 11 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு மையங்களுக்குள் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கடுமையான பரிசோதனைக்குப் பிறகே தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் பேப்பர், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், லாக் டேபிள்ஸ், கையில் அணியும் ஹெல்த் பேண்ட், தோள்பை, பிரெஸ்லெட், நகைகள், பெல்ட், பர்ஸ், வாட்ச், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், ஷýக்கள் போன்றவை அனுமதிக்கப்படவில்லை. மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, பாச்சல் பாவை இன்ஜினியரிங் கல்லூரி, நாமக்கல் தாலுகா காவேட்டிப்பட்டி குறிஞ்சி சீனியர் செகண்டரி, நாமக்கல் டிரினிடி இண்டர்நேஷனல் பள்ளி, கீரம்பூர் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி, நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் அகாடமி பள்ளி, குமாரபாளையம் தாலுகா, பல்லக்காபாளையம் ராயல் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி, எக்ஸல் இன்ஜினியரிங் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் அக்சரா அகாடமி பள்ளி, வித்யவிகாஸ் இண்டர்நேஷனல் பள்ளி, ஏமப்பள்ளி ரமணி இண்டர்நேஷனல் பள்ளிஆகிய 11 மையங்களில் மொத்தம் 6,300 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வர்களில் 120 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. மொத்தம் 6,120 பேர் தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு மையத்திற்கும் 5 போலீசார் மற்றும் அதிகாரிகள், கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டர். வருகின்ற ஜூன் 14ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமை மூலம் வெளியிடப்பட உள்ளது.

Updated On: 5 May 2024 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?