/* */

மலைவாழ் பெண்களுடன் நடமானமாடி கொமதேக வேட்பாளர் ஓட்டுவேட்டை

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், கொல்லிமலையில் மலைவாழ் பெண்களுடன் பாரம்பாரிய நடனமாடி ஓட்டு சேகரித்தார்.

HIGHLIGHTS

மலைவாழ் பெண்களுடன் நடமானமாடி கொமதேக வேட்பாளர் ஓட்டுவேட்டை
X

கொல்லிமலையில் மலைவாழ் பெண்களுடன் பாரம்பாரிய நடனமாடி ஓட்டு சேகரித்த கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன்

கொல்லிமலையில் மழைவாழ் பெண்களுடன் பாரம்பரிய கும்மி நடனம் ஆடி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் ஓட்டு சேகரித்தார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் லோக்சபா தொகுதியில், திமுக கூட்டணியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர் மாதேஸ்வரன், இன்று சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கொல்லிமலை பகுதியில் அதிகாலை முதலே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவர் கொல்லிமலை செம்மேடு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது, மலைவாழ் பெண்களுடன், அவர் பாரம்பரிய கும்மி நடனம் ஆடி வாக்கு சேகரித்தார்.

பின்னர் மலைவாழ் கிராமங்களுக்கு சென்று, திமுக ஆட்சியில் கொல்லிமலை பகுதிக்கு செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை எடுத்துக்கூறி ஓட்டு சேகரித்தார். திரளான கொமதேக, திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் அவருடன் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 April 2024 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  4. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  5. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  6. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  9. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  10. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...