/* */

நாமக்கல்லில் பிளஸ் 2 பொது தேர்வு துவக்கம் தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

Namakkal Dist Plus Two Exam நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் பிளஸ் 2 பொது தேர்வு துவக்கம் தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு
X

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தை, மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சிஇஓ மகேஸ்வரி.

Namakkal Dist Plus Two Exam

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. வருகிற 22ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வினை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட, 85 தேர்வு மையங்களில் 8,479 மாணவர்களும் 8,932 மாணவிகளும் என மொத்தம் 17,411 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 5 தேர்வு மையங்களில் தனித்தேர்வர்களாக 286 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் 112 பேரில் 94 மாணவர்களுக்கு, சொல்வதை எழுதுவதற்கு உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேல்நிலைப் பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில், 85 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 85 துறை அலுவலர்கள், 3 கூடுதல் துறை அலுவலர்கள், 163 பறக்கும் படை உறுப்பினர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் 1,211 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, பிளஸ் 2 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்துகொண்டார்.

Updated On: 1 March 2024 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்