/* */

Namakkal Dist Silk Farmers Financial Aid நாமக்கல் மாவட்டத்தில் பட்டு விவசாயிகளுக்கு ரூ. 4.34 கோடி நலத்திட்ட உதவி : கலெக்டர் தகவல்

Namakkal Dist Silk Farmers Financial Aid நாமக்கல் மாவட்டத்தில், 1,009 பட்டு விவசாயிகளுக்கு, ரூ. 4.34 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Namakkal Dist  Silk Farmers  Financial Aid   நாமக்கல் மாவட்டத்தில் பட்டு விவசாயிகளுக்கு  ரூ. 4.34 கோடி நலத்திட்ட உதவி : கலெக்டர் தகவல்
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா. 

Namakkal Dist Silk Farmers Financial Aid

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பட்டு விவசாயிகளுக்கு ஆதரவளித்து மாநிலத்தில் பட்டுத் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடவும், பட்டு விவசாயிகளின் நலனை உறுதி செய்திடவும், பட்டு வளர்ச்சித்துறை மூலம், பல்வேறு திட்டங்களை, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பட்டுவளர்ச்சித்துறை சார்பில் மல்பெரி புதுநடவு மேற்கொண்டு, புதிய பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்து, பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும், பட்டு விவசாயிகளுக்கு மாநில திட்டத்தின் கீழ் 1,007.25 ஏக்கரில் மல்பெரிநடவு செய்த 650 பட்டு விவசாயிகளுக்கு மானியமாக ரூ.1 கோடியே 13 லட்சத்து 88 ஆயிரத்து 500 விடுவிக்கப்பட்டுள்ளது. 124 தனி பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைத்த 124 பட்டு விவசாயிகளுக்கு மானியமாக ரூ.2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

196 பட்டு விவசாயிகளுக்கு, ரூ.1 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் நவீன புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்பட்டுள்ளது. மண் புழு உர குடில் அமைத்த, 39 பட்டு விவசாயிகளுக்கு ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 500 மானியத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, ராசிபுரம் தாலுகா, முத்துக்காளிப்பட்டியில் கடந்த 24.9.2021 அன்று வனத்துறை அமைச்சரால் அரசு பட்டுக்கூடு அங்காடி திறந்து வைக்கப்பட்டது. 8 மாவட்டத்திலிருந்து 5,360 விவசாயிகளால் 241.285 மெ.டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 11 கோடியே 89 லட்சத்து 92 ஆயிரத்து 100 மதிப்புள்ள பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் பட்டுவளர்ச்சித் துறையின் மூலம் 1,009 பட்டு விவசாயிகளுக்கு, ரூ.4 கோடியே 34 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Nov 2023 6:45 AM GMT

Related News